கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் வேத மந்திரங்கள்: 21 நாள் தொடர்ந்து நடக்கிறது

திருப்புத்தூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிட திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் 21 நாட்கள் தொடர்ந்து வேதமந்திரம் ஓதப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. அந்தந்த கோயில்களின் ஆகம விதிப்படி முறையான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோயிலில், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேத மந்திரங்கள், பாராயணம் நடந்தது. இந்த வேத மந்திரங்களை லண்டன் மாதவன் பட்டாச்சாரியார் தலைமையில் 10 பட்டாச்சியாரியார்கள் தினமும் ஒருமணி நேரம் ஓதி வருகின்றனர். இதுதொடர்ந்து 21 நாட்களுக்கு நடைபெறுகிறது.

Related Stories:

>