இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 694-ஆக அதிகரிப்பு: கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி-20 நாடுகள் முடிவு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 694-ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொடிய வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 45 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் 16 ஆக அதிகரித்துள்ளது.

ரூ.370 லட்சம் கோடி ஜி-20 நாடுகள் முடிவு

உலகம் முழுவதையும் கொரோனா  வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில்,  ஜி 20 மாநாடுகளின் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.  வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்றார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில், சார்க் உறுப்பு நாடுகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.370 லட்சம் கோடி) வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளுக்கு வழங்க ஜி-20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பின்ரான்ஸ்ம் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஜி-20யில் உள்ளன.

Related Stories:

>