தமிழகத்தை உலுக்கும் கொரோனா: மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி....பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2 பேர் பலியான நிலையில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த 26 பேரில் ஏற்கனவே ஒருவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரும் இறந்ததாக பரபரப்பு தகவல் வெளியே வந்தன. அந்த நபருக்கு சிகிச்சை அழைக்கப்பட்டது, ஆனால் அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் துபாயில் இருந்து திருச்சிக்கு திரும்பிய நபர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: