அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்க சொமோட்டோவுடன் இணைந்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்க சொமோட்டோவுடன் கேரள அரசு இணைந்துள்ளது. எர்ணாகுளம் காந்திநகரில் 8 கிமீ தொலைவிற்கு பொருட்களை கொண்டு சேர்க்கும் பணி நாளை தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் நேற்று வரை 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். 76,542 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 532 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்டதில 91 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிநாட்டினர். மீதமுள்ள 19 பேர் இவர்களுடனான தொடர்பில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் நடவடிக்கையாக சொமோட்டோ நிறுவனத்துடன் கேரள அரசு இணைந்துள்ளது. நாளை முதல் அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல பணிகள் தொடங்குகின்றன.

Related Stories: