×

கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டும் போதாது: பரவும் நிலை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்...WHO இயக்குநர் பேட்டி

வாஷிங்டன்: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் நேற்று வரை 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளது.  இந்தியாவை போல் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க சிங்கங்களை ஊருக்குள் விட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியசஸ், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப்  பிறப்பித்துள்ளன. ஆனால், ஊரடங்கு அறிவித்தால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது. இந்த சமயத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கண்டிப்பாக, ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இருக்காது. இது மிகப்பெரிய வாய்ப்பு என்றார்.

இத்தகைய சூழலில் ஊரடங்கு அறிவித்ததுடன் மட்டும் நிற்காமல், பாதிப்பு பரவும் நிலை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை, அவர்கள் சார்ந்த பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 21,000 பேர் மரணமடைந்துள்ளனர். ஊரடங்கு வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு அரசு துரிதகதியில் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Tags : spread ,victims ,WHO Director ,WHO , Curfew is not enough to control the corona: Proper treatment of victims should be given ... Interview with WHO Director
× RELATED கொரோனா முன்னெச்சரிக்கை: பிரதமர் மோடி...