கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்த 2,535 பேர் கைது; 1,656 வாகனங்கள் பறிமுதல்; 3,612 பேர் மீது வழக்குப்பதிவு : காவல்துறை அதிரடி

டெல்லி : கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்த 2,535 பேரை அம்மாநில போலீஸ் கைது செய்துள்ளனர். மேலும்  3,612 பேர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை 118 ஆக உயர்ந்து அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார்.

ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிவதும்,

அதனை தடுக்கும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 1,656 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,535 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை மீறி, 50 பேருடன் இறுதிச் சடங்கை நடத்தியதற்காக ஒரு விகாரும், பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தின் இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்படுவதை கருத்தில் கொண்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மீறினால் வாகனப் பதிவு உரிமத்தை ரத்து செய்தல் மற்றும் பாஸ்போர்ட்களைக் முடக்கலாம் என்றும் கேரள காவல்துறையும், அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: