21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் தங்கத்தின் விலையில் ஏறுமுகம் தான் : சவரன் ரூ.736 உயர்ந்து ரூ.32,864-க்கு விற்பனை

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.32,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.92 உயர்ந்து ரூ.4,108-க்கும் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.41,700-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ள இச்சூழலில் தங்கம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

Advertising
Advertising

 பொதுவாக, மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறையும் போது விலை குறைவது வழக்கம். ஆனால் இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பது அசாதாரணமாக இருக்கிறது.சென்னையில் இன்று (மார்ச் 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.4,108 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.736 உயர்ந்து ரூ.32,864-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,964 ஆகவும், டெல்லியில் ரூ.4,052 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,063 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,954 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,864 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,953 ஆகவும், ஒசூரில் ரூ.3,955 ஆகவும், கேரளாவில் ரூ.3,783 ஆகவும் இருக்கிறது.

Related Stories: