×

ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றிய வாலிபர்களுக்கு ‘தோப்புக்கரணம்’ தண்டனை: போலீசார் நடவடிக்கை

ஊட்டி:  ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த  வாலிபர்களை பிடித்து போலீசார் விரட்டியடித்தது மட்டுமின்றி, சில இடங்களில்  தோப்புக்கரணமும் போட வைத்தனர்.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், இதனை மீறி நேற்று ஊட்டி  மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் சிலர் வெளியில் வந்தனர். அனைத்து  பகுதிகளிலும், காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்ட பின்னரே  மக்களை நகருக்குள் அனுமதித்தனர். மேலும், தேவையின்றி ஊருக்குள் வந்த பலரை  போலீசார் எச்சரித்தது மட்டுமின்றி, விரட்டியடித்தனர்.

இருந்தபோதிலும்,  உள்ளூர் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு ஆங்காங்கே  சுற்றித் திரிந்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தது மட்டுமின்றி, சில  இடங்களில் வாலிபர்களை பிடித்து அவர்களை அதே இடத்தில் ‘இனிமேல்  ஊருக்குள் வர மாட்டேன், சுற்ற மாட்டேன்’ என சொல்லிக் கொண்டே தோப்புக்  காரணம் போட வைத்தனர். இதனை அறிந்த இளைஞர்கள் பிற்பகலுக்கு மேல் வெளியில்  வருவதை தவிர்த்துக் கொண்டனர்.Tags : Gopalakumaran ,Town ,locals , Aftershocks ,locals around, town violating,curfew
× RELATED இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்