144 தடையினால் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறை: 50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஓய்வு...சென்னை இணை ஆணையர் உத்தரவு

சென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 12 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 657ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில்  தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரது  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை  உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு  எச்சரித்துள்ளது.

இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பாதுகாப்பு பணியில் நாடு முழுவதும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தமிழக காவல்துறையில் 50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஓய்வு வழங்க சென்னை இணை  ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். நீரிழிவு, சர்க்கரை, உயர் அழுத்த இரத்தம் உட்பட எந்த நோயால் பாதிக்கப்பட்டவராக இந்தாலும் ஓய்வெடுக்க உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பில் உள்ள காவலர்கள் கவனமாக செயல்பட வேண்டும்  எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>