பிளஸ் 2 தேர்வுக்கு 34 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்’: மறுதேர்வு நடத்த உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்வும், பிளஸ் 1க்கு 3 பாடத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால், நேற்று முன்தினம் அனைத்து மாவட்டங்களிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அன்று நடந்த பிளஸ்2 தேர்வு எழுத 34 ஆயிரம் மாணவ, மாணவியர் வரவில்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்பேரில் 24ம் தேதி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறு ஒரு நாளில் தனியாக தேர்வு நடத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: