அமெரிக்க மாணவர்கள் கைவண்ணம் கிளிக் செய்தால் போதும் முழு விவரம் அறியலாம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக் கழக மாணவர்கள் நவித் மமூன், கேப்ரியல் ரஸ்கின் இணைந்து, ‘கோவிட்விசுவலைசர் டாட் காம்,’ என்ற கொரோனா குறித்த முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இதில் கருப்பு நிற உலக உருண்டையில் சிவப்பு நிறத்தில் உலக வரைபடம் இடம் பெற்றுள்ளது. மெதுவாக சுழலும் பூமியின் மீது எந்த நாட்டின் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறோமோ அதன் மீது `கிளிக்கினால் போதும் நாட்டின் பெயர், பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், இறந்தவர்கள், அன்றைய தேதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரங்கள் நமது விரல் நுனியில் கிடைத்து விடுகிறது. இணைய தளத்தின் கீழ் பகுதியில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: