சென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தம்பதி கைது: 78 சவரன் நகைகள் பறிமுதல்

தாம்பரம்: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது, உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் மன்னார் (எ) எழிலரசன் (59), அம்மு (40) என்பது தெரியவந்தது.
Advertising
Advertising

இதனையடுத்து நேற்று முன்தினம் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 78.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 40 வருடங்களாக மன்னார் இதுபோன்று தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கொள்ளையடித்த பணத்தில் உத்திரமேரூரில் புதிதாக வீடுகட்டி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: