×

கொரோனாவிற்கு நிகராகும் கொடிய தங்கம் : சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ரூ.32,128-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக 512 ரூபாய் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ள இச்சூழலில் தங்கம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பொதுவாக, மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறையும் போது விலை குறைவது வழக்கம். ஆனால் இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பது அசாதாரணமாக இருக்கிறது.

சென்னையில் இன்று (மார்ச் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,016 ஆக உள்ளது. நேற்று 3,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது.அதேபோல, நேற்று 31,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 512 ரூபாய் உயர்ந்து 32,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.50 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Corona , Ornament, gold, 144, prohibition, injunction
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...