கொலை நடுங்கச் செய்யும் கொரோனா… பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது! : சீனாவை விட இத்தாலியில் இரு மடங்கு உயிரிழப்பு

வாஷிங்டன் : சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 4,28,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,09,214 பேர் உலகளவில் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் 143பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் இத்தாலியில் நேற்று ஒரே நாளில், 743 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. ஆனால் சீனாவில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு 10க்கும் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளும் கொரோனாவால் நேர்ந்த உயிரிழப்புகளும்

இத்தாலி : 6,820,

சீனா : 3,281

ஸ்பெயின் : 2,991

ஈரான் : 2,077

பிரான்ஸ் :1,100

அமெரிக்கா : 784

பிரிட்டன் : 422

நெதர்லாந்து : 276

இந்தியா :10

Related Stories:

>