ரவுடி சரமாரி வெட்டிக்கொலை

சென்னை: பூந்தமல்லி அடுத்த திருமழிசை, உடையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (37). கடந்த 28.04.2016 அன்று திருமழிசை ஜெகன்னாத பெருமாள் கோயில் அருகே ஆனந்தன் என்பவரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி.  மேலும், 12.04.2016 அன்று திருமழிசை தெற்கு மாடவீதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பன் என்கிற பலராமன் (52) என்பவர் திருமழிசையில் உள்ள கோயில் மண்டபத்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது தலையில் கல்லைப்போட்டு இவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் பாஸ்கர் என்ற பேரூராட்சி ஒப்பந்த ஊழியரையும், குடிபோதையில் வெட்டிக்கொலை செய்துள்ளார். இவ்வாறு ஆனந்தன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன.

Advertising
Advertising

இந்நிலையில், வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்தன், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து  கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: