×

கொரோனா தாக்கம் எதிரொலி: வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இலவச உணவு, நிதியுதவி: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இலவச உணவு, நிதியுதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஏற்கனவே இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் கூடுதல் அளவு அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், முதற்கட்டமாக 3000 ரூபாயும், வாழ்வாதார இழப்பு ஏப்ரலிலும் நீடித்தால் வாரத்திற்கு ரூ.3,000 வீதமும் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.அதுமட்டுமின்றி, அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் அவர்களின் கடன்களுக்கான மாதத்தவணைகளை அடுத்த சில மாதங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

 ஆகவே, அவற்றை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும். அதேபோல், காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், குழந்தைகளுக்கான பள்ளிக்கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதுடன், வங்கிக் கடனும் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Corona Impact Echo ,Free Food and Sponsorship for Lifelong Living People: Ramadas ,People Who Have Lost Their ,Sponsorship ,Ramadas , Corona, livelihood, free food, sponsorship, ramadas
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு