×

குழந்தைகளை விளையாட விடுங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

குழந்தைகளுக்கு  ரொம்ப அவசியமானது விளையாட்டு. அதுவும் வீட்டைவிட்டு வெளியேறி மைதானத்தில் விளையாடும்போது அவர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு. விளையாடும்போது நேரிடையாக  சூரிய வெளிச்சம் குழந்தைகள் மீது விழும். அதனால் வைட்டமின் டி அவர்களுக்குப் போதுமான அளவு கிடைக்கும்.  தோல் புற்றுநோய் அண்டாது. தினமும் ஒரு மணி நேரம் மைதானத்தில் விளையாடினாலே போதும். அது  ஜிம்மில் இரண்டு மணிநேரம் ஒர்க்அவுட் செய்வதற்குச் சமம்.

தவிர, பிரச்சனைகளுக்கான சரியான தீர்வை எடுக்க விளையாட்டு மறைமுகமாக உதவுகிறது. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதால் சமூக உணர்வைக் கற்றுக்கொள்கிறார்கள். விளையாடும்போது பய உணர்வு காணாமல் போய்விடுகிறது. மண்ணுடன் பிணைந்து விளையாடுவதால் இயற்கையின் மீதான நேசமும் குழந்தைகளுக்கு வளர்கிறது. ஆனால், இன்றைய சூழலில் மைதானத்தில் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துவிட்டதாம்.

Tags : Games are essential for children.
× RELATED ஊரடங்கில் முடங்கிய குழந்தைகளை...