×

மனித கம்ப்யூட்டர்

நன்றி குங்குமம் முத்தாரம்

இன்று விண்வெளித் துறை என்றாலே நாசாவின் பெயர் தான் முதலில் வந்து நிற்கிறது. இதற்கு மூல காரணமாக இருந்தவர் கேத்தரின் ஜான்சன் என்ற பெண்மணி. அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பெண் கணித  மேதைதான் நாசாவின் விண்வெளிப் பயணங்களுக்கும் அதன் ஆராய்ச்சிக்கும் வித்திட்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது. கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டர் போலவே கணிதச் செயல்பாடு களைச் செய்தவர். அதனால் இவரை ‘நாசா’வின் மனித கம்ப்யூட்டர் என்றே அழைத்தனர்.

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் வாழ்ந்துவந்த ஆப்பிரிக்க வம்சத்தைச் சேர்ந்த குடும்பத்தில் 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி பிறந்தார்.  நாசாவில் பணியாற்றிய முதல் ஆப்பிரிக்க- அமெரிக்கா பெண் விஞ்ஞானி இவர்தான். குழந்தைப் பருவம் முதலே கணிதத்தின்மீது தீராத காதலுடன் இருந்தார். அமெரிக்காவில் நிறவெறி கோரத் தாண்டவம் ஆடிய காலத்தில் கேத்தரினின் குழந்தைப் பருவமும் இளம்பருவமும் கழிந்தது. நிறவெறி காரணமாக அவர் படிப்பை முடிக்கவே பெரும்பாடு பட்டார். ஆனாலும் படிப்பை முடித்து சில காலம் ஆசிரியையாக வேலை செய்தார். பிறகு நாசாவில் 1953-ம் ஆண்டு கணிதவியலாளராகப் பணிக்குச் சேர்ந்தார். அவருக்கு மட்டு மல்ல, நாசாவிற்கும் இது திருப்புமுனையாக அமைந்தது.

அவர் பணிக்குச் சேரும் கம்ப்யூட்டர் இல்லை. விண்வெளி சம்பந்தமான கடினமான கணக்குகளை எல்லாமே மனிதர்கள்தான் சரி செய்ய வேண்டும். அந்தக் கணக்குகளை கம்ப்யூட்டர் வேகத்தில் செய்வார் கேத்தரின் ஜான்சன். அதனாலே அவருக்கு ‘மனித கம்ப்யூட்டர்’ என்ற கௌரவம். இவருக்குப் பிறகு நிறைய பேர் மனித கம்ப்யூட்டர் என்று புகழப்பட்டாலும் யாரும் கேத்தரினின் இடத்தைத் தொடவில்லை. முதல் முதலாக  மனிதனை சந்திரனுக்கு அனுப்பிய ‘அப்பல்லோ 11’ விண்கலத்தில் கேத்தரினின் பணி முக்கியமானது. தவிர, விண்வெளிப் பயணத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால்  பாதுகாப்பாக விண்கலத்தை தரையிறக்குவதிலும் கெட்டிக்காரர். கடந்த பிப்ரவரி 24 அன்று 101-வது வயதில் இந்த மனித கம்ப்யூட்டர் தனது செயல் பாட்டை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது.


Tags : NASA's first name today is the Space Department
× RELATED உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி!