×

செவ்வாயில் தண்ணீர்

நன்றி குங்குமம் முத்தாரம்

எலன் மஸ்க் உட்பட பெரும் பணக்காரர்கள் செவ்வாயில் குடியேறு வதைப் பற்றி அடிக்கடி டுவிட்டிக் கொண்டிருக் கிறார்கள். இந்நிலையில் அங்கே பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை இஸ்ரோ, நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாயைச் சுற்றி வரும் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களை வைத்து ஒரு வரைபடத்தையும் நாசா உருவாக்கியிருக்கிறது.

இது, செவ்வாயின் மேற்பரப்பில் எங்கே தண்ணீர் இருக்கின்றது என்பதை துல்லியமாகக் காட்டுகிறது. செவ்வாயில் 2.5 செ.மீ ஆழத்திலேயே தண்ணீர் இருப்பதுதான் இதில் ஹைலைட். இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப நாசா  திட்டமிட்டு வருகிறது. அவர்கள் செவ்வாயில் எங்கே கால் பதிக்க வேண்டும் என்பதற்கு தண்ணீர் உள்ள பகுதிகள் உறுதுணையாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொகுப்பு: க.கதிரவன்

Tags : Rich, including Ellen Musk, has been tweeting about immigration on Tuesday.
× RELATED மார்த்தாண்டத்தில் சாலையில் ஓடும் அணை...