×

சொல்லிட்டாங்க...

டெல்லியை முடக்கும் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படாது. தேவையானபட்சத்தில் அதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர ஒருநாள் ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் அறிவித்துள்ளாரே தவிர, இதை சட்டமாக செயல்படுத்த
உத்தரவிடவில்லை.
- கர்நாடக முதல்வர் எடியூரப்பா

மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் பிரதமர் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க மறுக்கிறார்.
- திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன்

கொரோனா தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைக்கும் இன்றுபோல் மக்கள் தொடர்ந்து
ஒத்துழைக்க வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Tags : told....
× RELATED சொல்லிட்டாங்க...