×

நாடாளுமன்ற கூட்டத்தை இன்றுடன் முடிக்க வேண்டும்: திரிணாமுல் காங். கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தை இன்றுடன் ஒத்திவைக்கும்படி திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை, மக்களவை கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 13, மக்களவையில் 22 எம்பி.க்கள் உள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும்படி அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரிக் ஓ பிரையன், மக்களவையின் தலைவர் தலைவர்  சுதீப் பந்த்யோபாத்யாய் ஆகியோர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலங்களவையில் 44, மக்களவையில் 22 சதவீத எம்பி.க்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். எம்பி.க்கள் மட்டுமின்றி, நாடாளுமன்றத்துக்கு வந்து செல்வோரையும் கருத்தில் கொண்டே, நாடாளுமன்ற தொடரை இன்றுடன் ஒத்திவைக்க வேண்டும். மக்களுக்கு கொரோனா அச்சத்தை போக்க முன்மாதிரியாக நாடாளுமன்றத்தை நடத்தி வருவதாக அரசு கூறுகிறது. இது பொறுப்பற்ற பதிலாகும் என்றார்.

Tags : session ,Trinamool Cong ,Parliamentary , Parliamentary
× RELATED கரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு