சேலம் ரயில்வே அலுவலகத்தில் போலி நியமன ஆணை கொடுத்து பணியில் சேர முயன்றவர் கைது

சேலம்: ஆந்திர மாநிலம் குண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் ஹனுமேஷ்(30). பி.காம் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் சேலம் ரயில்ேவ கோட்டத்தில் உதவியாளராக பணியில் சேர்வதற்கான பணி நியமன ஆணையுடன் சேலம் வந்தார். பின்னர், ரயில்வே கோட்ட முதன்மை அலுவலக சூப்பிரண்டு ஈஸ்வரனிடம், தன்னுடைய பணி நியமனத்திற்கான ஆணையை வழங்கினார். இதையடுத்து, அவர் அளித்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது, பணி ஆணையில் அதிகாரிகளுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக, சேலம் கோட்டத்தில் பணியில் சேருபவர்களுக்கு, தென்னக ரயில்வே அலுவலகத்தில் இருந்துதான், நியமன ஆணை வழங்கப்படும்.

Advertising
Advertising

ஆனால், ஹனுமேஷ் கொண்டு வந்த நியமன ஆணை, ஆந்திராவில் உள்ள  ரயில்வே அலுவலகம் மூலம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஹனுமேஷிடம் விசாரணை நடத்திய போது, அவர் போலியான நியமன ஆணை கொண்டு வந்து, பணியில் சேர முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து, ஹனுமேஷை சூரமங்கலம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு  அவரை கைது செய்தனர்.

Related Stories: