குற்றவாளி சிக்கினார்

தண்டையார்பேட்டை: வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திக் (25). பாரிமுனையில் உள்ள பண பரிமாற்றம் செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது நிறுவனத்தில் இருந்து 18 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு உரிமையாளர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். பாரிமுனை மூர்தெருவில் வந்தபோது, 4 மர்ம ஆசாமிகள் அவரை வழிமடக்கி அடித்து உதைத்து பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

Advertising
Advertising

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தபோது, வழிப்பறி சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த ஜாபர் சாதிக் (24) என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஜாபர் சாதிக் தண்டையார்பேட்டையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்றுமுன்தினம் இரவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டில் இருந்த ஜாபர் சாதிக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Related Stories: