×

கொரோனாவை தடுக்க மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கொரோனாவை தடுக்க மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை தடுக்க உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேலான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஊரடங்கு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு வருமென எதிர்பார்ப்பதாக ராமதாஸ் டிவிட்டர் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை வாரச்சந்தைகள் நடக்காமல் இருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.அரசு தடை விதித்த போதிலும் பல இடங்களில் வாரச்சந்தைகள் நடைபெற்றதாக ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Tags : Ramadas ,Corona , Corona
× RELATED கொரோனா பரவலை தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் டிவிட்டர் பதிவு