×

ஸ்மார்ட் ஹெல்மெட்

நன்றி குங்குமம் முத்தாரம்

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனாவின் விழி பிதுங்கிவிட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரே வாரத்தில் மருத்துவமனையைக் கட்டி ஆச்சர்யப்பட வைத்தது சீனா. கொரோனா வைரஸ் தொற்று நோய் போல பரவும் என்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வலைவீசிப் பிடித்து தனிமைப்படுத்துகிறது சீனா. இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் போலீஸார் பிடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்நிலையில் சீனா புதிதாக ஸ்மார்ட் ஹெல்மெட்டை  உருவாக்கியிருக்கிறது. பிரத்யேகமாக காவல்துறையினருக்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஹெல்மெட்டில் உடலின் வெப்பநிலையை அறியும்  கருவியும் கேமராவும் உள்ளது. நூறு பேர் இருக்கும் கூட்டத்தில் ஒருவரின் உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் கூட இந்த ஹெல்மெட் கண்டுபிடித்துவிடும். அவரை கொரோனா தாக்கியிருக்கிறதா என்று சுலபமாக கண்டுபிடித்து நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம். ஆம்; மக்கள் கூட்டத்தின் நடுவே இருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கவே இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்.

Tags : Coronavirus is raging the world.
× RELATED டிக் டாக் செயலிக்கு தடை.! கலாசார...