உலகின் பணக்கார கால்பந்து அணிகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

நாம் கிரிக்கெட்டைத் தலையில்  தூக்கி வைத்துக்கொண்டு குதித்தாலும், உலக அளவில் கால்பந்து விளையாட்டுக்கே முதலிடம். இந்திய ஐ.பி.எல் போட்டிகளில் ஏராளமான பணம், தனிப்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இருந்தாலும், இது கால்பந்து வீரர்களை ஒப்பிடுகையில் மிகச் சொற்பமே!கால்பந்து போட்டிக்கு ஐரோப்பாவில் மிக மிக அதிக டிமாண்ட்! ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள், வருடா வருடம் உலகப்புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டியை நடத்துகின்றன. இந்த வகையில் சில அணிகளையும், வீரர்களையும், அது சார்ந்த நாட்டையும் அறிந்துகொள்வோமா? எப்சி பார்சிலோனா (ஸ்பெயின்)

வருமானம் : 840.8  மில்லியன் யூரோ.  இந்த அணியின் மிக அதிக சம்பளம் பெறுபவர் மெஸ்ஸி - 30 மில்லியன் யூரோ. கடந்த ஆண்டு இந்தக் குழு பெற்ற இறுதி வெற்றி: 1

மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து)

வருட வருமானம் : 711.5 மில்லியன் யூரோ. மிக அதிக சம்பளம் ெபறுபவர் டேவிட் டி ஜியா - 22 மில்லியன் யூரோ கடந்த ஆண்டு இந்தக் குழு ஒரு போட்டியில்கூட இறுதி ஆட்டத்தில் வெல்லவில்லை.

 

பாயரென் மூனிச் (ஜெர்மனி)

இதன் வருட வருமானம்: 660.1 மில்லியன் யூரோ. மிக அதிக சம்பளம் பெறுபவர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி - 20 மில்லியன் யூரோ. கடந்த ஆண்டு இது இறுதிப்போட்டி யில் இரண்டில் வென்றது.

 

ரியல் மேட்ரிட் (ஸ்பெயின்)

இதன் வருட வருமானம்: 757.3 மில்லியன் யூரோ. மிக அதிக சம்பளம் பெறும் வீரர், ஈடன் ஹசார்ட் - 23 மில்லியன் யூரோ. கடந்த ஆண்டு இது,

இறுதி ஆட்டத்தில் ஒரு போட்டியில் வென்றது.

 

பாரீஸ் செயின்ட் ஜர்மயன் (பிரான்ஸ்)

இதன் வருட வருமானம்: 635.9 மில்லியன் யூரோ. மிக அதிக சம்பளம் பெறும் வீரர் நெய்மார் - 36 மில்லியன் யூரோ. கடந்த ஆண்டு இந்த அணி

இரு போட்டிகளில் வென்றது!

Related Stories: