குகார்

நன்றி குங்குமம் முத்தாரம்

1955-ம் ஆண்டு  கல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளியியல்துறை இங்கிலாந்திலிருந்து HEC2M என்ற டிஜிட்டல் கம்ப்யூட்டரை தனது பணிகளுக்காக விலைக்கு வாங்கியது. இதுவே இந்திய நிறுவனம் வாங்கிய முதல் கம்ப்யூட்டர் ஆகும். திரை, கீபோர்டு என ஏதுமில்லை. இதன் நினைவகத்திறனே 3 கேபிதான். 1974 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, காலை 9 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கிரிஸ்டின் சூபக் என்ற டிவி தொகுப்பாளினி, WXLT TV நேரலை நிகழ்வில் உலகமே கவனித்துக்கொண்டிருக்க, அதிர்ச்சி தரும்விதமாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனார். ஊடகத்தில் மக்களின் முன்னிலையில் பெண் இறந்துபோன முதல் சம்பவம் இதுவே.

 

காலணிக் கடையில் கால் அளவை சரியாக கணிக்க உதவும் மெஷினின் பெயர் Brannock. இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளரின்பெயர் சார்லஸ் பிரான்னோக். ‘ஐ லவ் யூ ரஸ்னா’ என சம்மரில் சலிக்க சலிக்க கேட்கும் விளம்பரத்தில் வரும் ரஸ்னா என்ற வார்த்தைக்கு  சமஸ்கிருதத்தில் நாக்கு என்று அர்த்தம். 1793 மார்ச் 4 அன்று பிலடெல்பியாவில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்றபோது பேசிய உரையின் வார்த்தைகள் எண்ணிக்கை 135. பதவியேற்பு உரைகளிலேயே இது மிகவும் சிக்கன உரையாகும். 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலுள்ள பெங்களூரு சிட்டி மார்க்கெட்டில்தான் இந்தியாவிலேயே முதல் மின்சார தெருவிளக்கு அமைக்கப்பட்டது.

1955ஆம் ஆண்டு நூறுகோடி வருமானத் தை முதன்முதலாக ஈட்டிய அமெரிக்க நிறுவனம் ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ ஆகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில், டிண்டோரி என்ற நகரம் டிண்டோரி மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. இந்த நகரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் நர்மதை ஆற்றின் கரையில் குக்ராமாத் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் கன்ஹா தேசியப் பூங்காவும் அச்சனக்மார் (சட்டீஸ்கர்) வனவிலங்கு சரணாலயமும் உள் ளன. குக்ராமாத்தைச் சுற்றி பாய்கா என்ற பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களும் உள்ளன. பழங்குடியினர் உப்பிலிருந்து சைக்கிள் வரை குக்ராமாத்தில்தான் வாங்குகிறார்கள்.

நர்மதை, சோன் நதிகள் உற்பத்தியாகும் அமர் கண்டக் என்ற புனித தலத்திற்கு குக்ராமாத் வழியாகத்தான் செல்ல வேண்டும். குக்ராமாத்தில் ரின்முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வழிபட்டால் கடன் தொல்லைகளிலிருந்து மீளலாம் என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது ஒரு வளர்ப்பு நாயின் நினைவாகக் கட்டப்பட்டது. ‘குகார்’ என்றால் சமஸ்கிருதத்தில் நாய் என்று பொருள். ரிவா பான்ஜாரா என்பவர் உள்ளூர் அடகுக் கடைக்காரர் ஒருவரிடம் தன் வளர்ப்பு நாயை அடமானமாக வைத்து கடன் பெற்று வியாபார விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். ஒருமுறை அடகுக் கடைக்காரரின் கடை கொள்ளையர்களால்  கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. நாய் தன் மோப்ப சக்தியால் அருகிலுள்ள ஆற்றங்கரையில் திருடர்கள் புதைத்து  வைத்திருந்த நகையைக் கண்டுபிடித்துக் கொடுத்தது. இதனால் அடகுக் கடைக்காரர் கடனை ரத்து செய்து, நாயை விடுவித்துவிட்டார். இதைக் கடிதமாக எழுதி நாயின் கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்.

தொகுப்பு:  க. ரவீந்திரன்

Related Stories:

>