×

கடலிலிருந்து வெளியேறி தரையில் விளையாடி மகிழ்ந்த ஆக்டோபஸ்!!

தண்ணீரை விட்டு தரையில் உலாவும் ஆக்டோபஸ் ஒன்றை தனது செல்போன் மூலம் நெருக்கமாகப் படம் பிடித்துள்ளார் இளைஞர் ஒருவர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேன்லி கடற்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், பாறைகளுக்கு நடுவே இருந்த கடல் நீரில் ஆக்டோபஸ் ஒன்றினைக் கண்டார்.

தனது செல்போன் மூலம் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஆக்டோபசும் தன் பங்கிற்கு தரையில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. பின்னர் சமர்த்தாக மற்றொரு குழியில் இருந்த நீருக்குள் சென்று அமிழ்ந்து கொண்டது. அனைத்தையும் மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் கொண்ட அந்த இளைஞர் மறக்காமல் ஆக்டோபசுடன் சேர்ந்து தானும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Tags : Octopus ,Sea Out of the Ground , A young man is pictured with his cell phone, an octopus floating on the ground.
× RELATED வேலூர் வாலாஜாவில் வெடிவிபத்து: 6 பேர்...