×

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை கே.கே.நகரில் மீட்டது காவல்துறை

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை கே.கே.நகரில் காவல்துறை மீட்டது. குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் கே.கே.நகரில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். பெசன்ட் நகரில் மணி, வளையல் விற்பனை செய்யும் தம்பதி பாட்ஷா - சினேகாவின் 8 மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த தம்பதி நேற்று பெசன்ட் நகர் கடற்கரையில் உறங்கியபோது பெண் குழந்தை கடத்தப்பட்டது.

விக்ரவாண்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர் சினேகா(23). இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 8 மாதத்தில் ராஜேஸ்வரி என்ற கைக்குழந்தை உள்ளது.

இவர்கள் ஊசிமணி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இருவரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து ஊசிமணி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தனது கைக் குழந்தையுடன் சினேகா உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு சினேகா தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனது கணவர் தான் குழந்தையை எடுத்திருப்பார் என அவரிடம் கேட்டபோது அவர் எடுக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் தனது உறவினர்களுடன் கடற்கரை முழுவதும் குழந்தையைத் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் தாய்  சினேகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு பெண் எட்டு மாத கைக்குழந்தையான ராஜேஸ்வரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் குழந்தையைக் கடத்திய பெண் செல்லும் பாதையில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை கே.கே.நகரில் காவல்துறை மீட்டுள்ளது.

Tags : KK Nagar ,Chennai ,Besant Nagar Baby , Baby, rescue
× RELATED வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய்...