விருதுநகரில் ஒரு வாரத்தில் உடைந்த பாதாளச்சாக்கடை மூடிகள்

விருதுநகர்:  விருதுநகர் பர்மா காலனியில் வீடுகளுக்கு அமைக்கப்பட்ட பாதாளச்சாக்கடை  இணைப்பு தொட்டியின் மூடிகள் ஒரு வாரத்திலேயே  உடைந்து கம்பிகள் மட்டுமே மிஞ்சியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். விருதுநகர் பாதாளாச்சாக்கடை பணிகள் 14 ஆண்டுகள் நிறைவேறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. நகரில் உள்ள 18 ஆயிரம் வீட்டு இணைப்புகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகளை மக்கள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.  இந்நிலையில்  12 ஆயிரம் வீட்டு இணைப்புகளுக்கு இணைப்பு வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதை ஒப்பந்தம் எடுத்து நிறுவனம் வேலையை செய்யாமல் வேறு ஒப்பந்தாரர்கள் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் பர்மா காலனியில் இருந்த சாலைகளை அகற்றி பேவர்பிளாக் ரோடு போடப்பட்டன. அப்போது பாதாளச்சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட வீட்டு இணைப்புகளுக்கான மூடிகள் தரமான கான்கிரீட் மூடிகளை கொண்டு மூட வேண்டுமென்பது விதி. ஆனால், தரமற்ற சிலாப் கற்களை வைத்து மூடி வைத்தனர். மூடிகள் போட்டு 20 நாட்களுக்குள் சிலாப் கற்கள் உடைந்து வீட்டு இணைப்பு குழிகள் பள்ளங்களாக காட்சி தருகின்றன. சாலையில் செல்வோர் இரவு நேரங்களில் குழிகளில் விழுந்து செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. எனவே, பாதாளச்சாக்கடை வீட்டு இணைப்பு மூடிகளை தரமான கான்கிரீட் மூடிகளை கொண்டு மூட வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* வீட்டு இணைப்புகளுக்கான மூடிகள் தரமான கான்கிரீட் கொண்டு மூட வேண்டுமென்பது விதி. ஆனால், தரமற்ற சிலாப் கற்களை வைத்து மூடி வைத்தனர். மூடிகள் போட்டு 20 நாட்களுக்குள் சிலாப் கற்கள் உடைந்து வீட்டு இணைப்பு குழிகள் பள்ளங்களாக காட்சி தருகின்றன

Related Stories: