×

காட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘நாளை முதல்  மே மாதம் வரை வழக்கத்தை காட்டிலும் கோடை வெப்பம் கடுமையாக இருக்கும்,’ என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பாகவே, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இப்போதே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. குளுகுளு மாநிலமாக கருதப்படும் கேரளாவில் கடந்த மாதமே 33 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் அடிக்கத் தொடங்கி விட்டது. அது, அங்குள்ள மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜனவரியில் இவ்வளவு கொடுமையான வெயிலை அவர்கள் பார்த்தது கிடையாது என்பதே இதற்கு காரணம். தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயில் அதிகமாக இருக்கும். வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளில் கோடை வெப்பம் அதிகமாக காணப்படும்,’ என எச்சரித்துள்ளது. தென் இந்தியாவில் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளில் மட்டுமே வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Weather, weather station
× RELATED ரூ.1823 கோடி வரி பாக்கி – காங்கிரஸ் கண்டனம்