கேரளாவில் மீண்டும் பரபரப்பு மலேசியாவில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா?

திருவனந்தபுரம்: மலேசியாவில்  இருந்து கொச்சி திரும்பிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ்  முதன் முதலில் கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டது. சீனாவில்  படித்த ஒரு மாணவி உட்பட 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி  தென்பட்டது. இதையடுத்து, இவர்கள் திருச்சூர், ஆலப்புழா மற்றும் காசர்கோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறியுள்ளனர்.  3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.  இவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனறு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்,  நேற்று கண்ணூர் பையனூரை ேசர்ந்த 36 வயது இளைஞர் மலேசியாவில் இருந்து  விமானம் மூலம் கொச்சி திரும்பினார். விமானத்தில் வரும்போது அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருந்துள்ளது.

விமான நிலையத்தில் இறங்கிய உடன் அவருக்கு மருத்துவ பரிசோதனை ெசய்யப்பட்டது. உடனடியாக அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே கொரோனா பாதிப்பு உள்ளதா எனறு தெரிய வரும்.

Related Stories: