இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க பஞ்சாப் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் சட்டப் பேரவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ெஜட்டை இம்மாநில நிதியமைச்சர் மன்பீரித் சிங் பாதல் நேற்று தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியதாவது:   அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போதுள்ள 60ல் இருந்து 58 ஆக குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலமாக ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை போல், மூன்று மடங்கு  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். . இரண்டு கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 59 வயதானவர்கள் மார்ச் 31ம் தேதியும், 58 வயதானவர்கள் செப்டம்பர் 30ம் தேதியும் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். தற்போது, 3.50 லட்சம் ஊழியர்கள் அரசு பணியில் இருக்கின்றனர். மேலும், நிலமற்ற பண்ணை தொழிலாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பள்ளிகளில் பிளஸ் 2 வரை இலவச கல்வி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: