கேரளாவில் 2 நாட்களுக்கு முன் மாயமான 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்டாரா என சந்தேகம்

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே வீட்டில் இருந்து மாயமான சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ேகரள  மாநிலம், கொல்லம் அருகே கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்தவர்  பிரதீப் குமார். அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தன்யா.  தம்பதிக்கு 6 வயதில் தேவநந்தா என்ற மகள் இருந்தார். 1ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று முன்தினம் காலை  வீட்டின் முன் சிறுமி விளையாடி ெகாண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித் தனர். சமூக வலைத்தளங்களிலும் தேவதன்யாவின் படத்துடன்  மாயமான செய்தி வெளியானது. தன்யாவின் வீட்டுக்கு அருகே  ஆறு  உள்ளது. சிறுமி ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் தேடினர். இதற்கிடையே,  மகள் மாயமானது குறித்து அறிந்த பிரதீப் குமார் அவசரம் அவசரமாக ஊருக்கு திரும்பினார். இந்நிலையில்,  நேற்று காலை ஆறு்றில் 500 மீட்டர் தொலைவில்  சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.  அவள்  தனியாக ஆற்றுக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லாததால், யாராவது கடத்தி ஆற்றில் வீசியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: