×

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.9 கோடி டாலர் உயர்ந்து 47,612 கோடியாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  இதற்கு முந்தைய வாரத்தில் கையிருப்பு 300 கோடி டாலர் அதிகரித்து 47,609.2 கோடி டாலராக இருந்தது. தற்போதைய கையிருப்பு சிறிது உயர்ந்திருந்தாலும், புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு குறைந்திருந்தாலும், தங்கம் கையிருப்பு மதிப்பு அதிகரித்ததே கையிருப்பு அதிகரிக்க முக்கிய காரணம்.  அதேநேரத்தில், தொடர்ந்து பல வாரங்களாக உயர்ந்து வந்த கரன்சி மதிப்பு, தற்போது 49 கோடி டாலர் சரிந்து 44,145.8 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் கையிருப்பு தொடர்ந்து 2வது வாரமாக 53.9 கோடி டாலர் உயர்ந்து 2,966.2 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 1.5 கோடி டாலர் சரிந்து, 357.5 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : Forex reserves ,increase
× RELATED தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!...