35 ஆண்டாக உத்தரகாண்ட் வக்கீல்கள் நடத்தும் சனிக்கிழமை ஸ்டிரைக் சட்ட விரோதமானது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: உத்தரகாண்டில் வக்கீல்கள் 35 ஆண்டாக அற்ப காரணங்களுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் உள்ளிட்ட 3 மாவட்ட வக்கீல்கள்  கடந்த 35 ஆண்டுக்கு முன்பாக தனி உயர் நீதிமன்றம் கோரி சனிக்கிழமையில் ஸ்டிரைக்கை தொடங்கினர். பின்னர் உபி.யிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டு தனி நீதிமன்றம் வந்த பிறகும் கூட, இப்போராட்டம் தொடர்ந்தது. பாகிஸ்தான் பள்ளியில் வெடிகுண்டு வெடித்தது, தூரத்து உறவினர் மரணம் என அற்ப காரணங்களுக்காக அவர்கள் வாராவாரம் சனிக்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

இது சட்ட விரோதமானது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வக்கீல்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அமர்வு,. ‘என்ன காமெடியா செய்கிறீர்கள்? வாராவாரம் சனிக்கிழமையில் ஸ்டிரைக் செய்வோம் என எப்படி கூற முடியும்?’’ என கண்டித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சனிக்கிழமை ஸ்டிரைக் சட்ட விரோதமானது என கூறிய நீதிபதிகள், மனுவுக்கு பிதிலளிக்கும்படி இந்திய, உத்தரகாண்ட் மாநில பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: