×

மூதாட்டியிடம் நகை அபேஸ்

சென்னை: வடபழனி ஆற்காடு சாலையை சேர்ந்த நாகம்மாள்(70), சாலையோரம் பழ வியாபாரம் செய்து, அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நடைபாதையில் தூங்கியபோது, அவரது பையில் வைத்திருந்த 2 சவரன் செயின் மற்றும் வெள்ளி கொலுசை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
* கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்த பிச்சைக்கனி (76) நேற்று மாநகர பஸ்சில் பெரம்பூர் வழியாக பெரியார் நகர் சென்றபோது, 2 பெண்கள் நூதன முறையில் பிச்சைக்கனியின் 8 சவரன் தாலி செயினை அபஸே் செய்தனர்.
* தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தங்கதுரை (32), நேற்று பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவரிடம் செல்போன் பறிப்பு: அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சேஜார் அலி (30). மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சைதாப்ேபட்டை நீதிமன்றம் முன்பு நின்று தனது செல்போனில் பேசி கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரது செல்போனை பறித்து சென்றனர்.Tags : Jewelry Abbey ,Mutant. Old Lady , Old Lady, jewelry
× RELATED மாநகர பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகை அபேஸ்