சிவகளையில் 2 இரும்பு குண்டு கண்டுபிடிப்பு

ஏரல்: வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் சிவகளை பரும்பு பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி நடத்தியதில் முதுமக்கள் தாழி, குடியேற்ற பகுதி, புடைப்பு சிற்பம், கல்தூண்,  வட்டகல், பாறைகிண்ணம், கற்கால மனிதர்களின் ஆயுதங்கள் என கண்டுபிடித்தார்.இவை அனைத்தும் வைகுண்டம் பள்ளியில் தொண்மை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் கண்டுபிடிப்புகளை அவர், இந்திய, தமிழக தொல்லியல் துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் அவர்கள் சிவகளை  பகுதியில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் மாணிக்கம் அப்பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 2 இரும்பு எடைக் குண்டுகளை நேற்று கண்டுபிடித்துள்ளார்.

Related Stories: