பஸ் மீது குண்டு வீசிய வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் கிச்சான்புகாரி ஆஜர்

நெல்லை: நெல்லை டக்கரம்மாள்புரத்தில் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கிச்சான் புகாரி நேற்று பெங்களூரு சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2012ம் ஆண்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் மீது 22ம் தேதி அதிகாலையில் கல் மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளை  ரபீக், கிச்சான் புகாரி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு நெல்லை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தொடர்புடைய கிச்சான் புகாரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையை நீதிபதி மோகன் ஏப். 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதைதொடர்ந்து கிச்சான்புகாரி கார்நாடக மற்றும் தமிழக போலீசாருடன் பெங்களூர் சிறைக்கு அழைத்து  செல்லப்பட்டார்.

Related Stories: