புதுச்சேரி பாஜகவில் சலசலப்பு மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்தார் கிரண்பேடி

புதுச்சேரி:  காரைக்கால் என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் கவர்னர் கிரண்பேடி பங்கேற்காமல் ராஜ்நிவாஸ் சென்றார். இது, புதுச்சேரி பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று  நடைபெற்றது. இதில் மத்திய தேசிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு 116 மாணவர்களுக்கு பட்டங்களை   வழங்கினார். மத்திய அமைச்சருடன் கவர்னர் கிரண்பேடி, முதல்வர்  நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக  என்ஐடி இயக்குனர் சங்கரநாராயணசாமி அறிவித்திருந்தார். அதன்படி   இவ்விழாவில் பங்கேற்பதற்காக நேற்று விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். அவரை கவர்னர்  கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, வைத்திலிங்கம்  எம்பி மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.

 பின்னர்  காரைக்கால் செல்ல தயாராக இருந்த ஹெலிகாப்டரில் மத்திய அமைச்சர் உள்ளிட்ட 4  பேர் செல்வதாக இருந்தது. அப்போது தனக்கு குறிப்பிட்ட சில முக்கியமான வேலைகள் இருப்பதாக தெரிவித்தார். அதோடு தங்களுடன் நான்  அவசியம் வர வேண்டுமா? என மத்திய  அமைச்சரிடம், கிரண்பேடி கேட்கவே அவர் வேண்டாம் எனகூறினார். பின்னர் கவர்னர், காரைக்கால்  விழாவுக்கு செல்லாமல் ராஜ்நிவாஸ்  சென்றடைந்தார். விழா அழைப்பிதழில் கவர்னர் கிரண்பேடி பெயர் இருந்தும்,  மத்திய அமைச்சர்  விழாவுக்கு  அழைத்து  செல்லாமல் புறக்கணித்த சம்பவம் பாஜக வட்டாரத்தில்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: