15வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: முதல்வர் எடப்பாடியை சந்தித்து போராட்டக்குழு பேச்சுவார்த்தை

சென்னை: வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினர். சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 14ம்தேதி வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள் போராட்டம் தொடங் கினர். அப்போது, போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு முதியவர் இறந்தார்.

Advertising
Advertising

போராட்ட களத்தில் ஒரு இளம்ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்ட களத்தில்  பங்கேற்ற அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு  வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, தமிழகத்தில் இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். போராட்டத்தை கைவிடும்படியும் முதல்வர்  கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: