பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு196 பேர் தேர்வு எழுத தடைவிதிக்க வேண்டும்: கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும் என்று தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே, அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தமிழ்நாடு தனியார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அந்த கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகள் எழுதியோரில் 99 பேர் முறைகேடான வழியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே தேர்வு மையத்தை தெரிவு செய்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் போட்டித் தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் இதுவரையில் தேர்வு எழுத தடை  செய்யவில்லை. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெயர்களை கூட இது வரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

கடந்த 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மறு தேர்வுக்கும் மேற்கண்ட 196 பேரும் விண்ணப்பித்தார்களா என்ற விவரத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இந்நிலையில், மேற்கண்ட அரசு பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தடை செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும்.

Related Stories: