திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி லண்டனில் படிக்கும் நடிகைக்கு வீடியோ மூலம் தற்கொலை மிரட்டல்: முகத்தில் ஆசிட் வீசுவதாக எச்சரிக்கை...இளம் தொழிலதிபர் தந்தையுடன் கைது

சென்னை: திருமணம் செய்து கொள்ளும் படி தனது கழுத்தில் கத்தியை ைவத்து தற்கொலை முயற்சி செய்யும் வீடியோவை, லண்டனில் படித்து வரும் நடிகைக்கு அனுப்பி, மிரட்டல் விடுத்த இளம் தொழிலதிபர் மற்றும் அவரது  தந்தையை போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் சித்ரா. இவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: சித்ராவின் மகள் சுருதி தற்போது  லண்டனில் உயர்படிப்பு படித்து வருகிறார். அவர் திருமணத்திற்கு மணமகன் வேண்டி மேட்ரிமோனியில் வரன் தேடிள்ளனர். அப்போது, சென்னை முகப்பேரு பகுதியில் குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் இளம்  தொழிலதிபர் அமுதன் வெங்கடேசன் (33) என்பவர் அறிமுகமானார். இருவருக்கும் பிடித்ததால் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சுருதி மேல்படிப்பு  படிக்க லண்டன் சென்று விட்டார். அதன்பிறகு அமுதன் சுருதிக்கு வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். அப்போது அமுதனின் தந்தை ராஜசேகரும் சுருதியிடம் பேசி உள்ளார்.  பிறகு அமுதனின் நடவடிக்கை பிடிக்காததால் அவர் விலக ஆரம்பித்துள்ளார். பின்னர், அமுதனை திருமணம் செய்ய சுருதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீடியோ காலில் பேசும் போது, தன்னை காதலிக்க வேண்டும், திருமணம்  செய்து கொள்ள வேண்டும் என கூறி, தனது கழுத்தில் கத்தியை வைத்து அமுதன் சுருதிக்கு திருமணம் செய்து கொள்ளும் படி தற்கொலை மிரட்டல் வீடியோவை அனுப்பியுள்ளார். இதற்கு அவரது தந்தை ராஜசேகரும் உடந்தையாக  இருந்துள்ளார்.

இதற்கிடையே லண்டனில் உள்ள நடிகை சுருதியை சென்னை வந்ததும் ஆசிட் வீசிவேன் என்று அமுதன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை சுருதி சம்பவம் குறித்து அவரது தாய் சித்ராவுக்கு தகவல் அளித்தார்.  அடுத்த மாதம் சென்னைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமுதனால் தனது மகள் சுருதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எனது மகளை திருமணம் செய்ய வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுக்கும் அமுதன் மற்றும்  அவரது தந்தை ராஜசேகர்(58) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்பட்டது. சுருதி வருங்கால மனைவி என்பதால் அவருக்கு அமுதன் பல லட்சம் பணத்தை செலவு செய்துள்ளார். பின்னர் லண்டன் சென்றதும் சுருதி திருமணம் செய்ய மறுத்துவிட்டது தெரியவந்தது.  இதனால் ஆத்திரமடைந்த அமுதன் நடிகை சுருதி மீது ஆசிட் வீசுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் அமுதன் வெங்கடேசன்(33) அவரது தந்தை ராஜசேகர் (58) மீது  பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் 2002 மற்றும் ஐபிசி 294(பி), 506(i) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அதிரடியாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் நீதிபதி சொந்த ஜாமினில்  வெளியே விட்டார்.

‘ஆடி போனா ஆவணி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சுருதி அறிமுகமானார். இந்த திரைப்படம் சரியாக ஓடாததால் நடிப்பு தொழிலை சுருதி விட்டுவிட்டு லண்டனில் மேல் படிப்பு படிக்க முடிவு செய்தார். இதற்கிடையே சுருதிக்கு  அவரது பெற்றோர் மேட்ரிமோனியில் வரன் பார்த்துள்ளனர். அப்போது ஜெர்மனியில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த கோவையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுருதியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி  இருவரும்  அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். அப்போது, சுருதி தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பாலமுருகனிடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதன்படி பாலமுருகனிடம் இருந்து ரூ.45 லட்சம் பணத்தை  அவர் பறித்துள்ளார்.

பின்னர் சுருதி பாலமுருகனுடனான தொடர்பை அவர் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொறியாளர் பாலமுருகன் நடிகை சுருதி மீது தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக  கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, நடிகை சுருதி மேட்ரிமோனியில் தனது புகைப்படங்களை போட்டு வரன் தேடுவதாக பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து  வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து கோவை போலீசார் நடிகை சுருதி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சித்ரா, சகோதரன் சுபாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில்  அடைத்தனர். பின்னர் வெளியே வந்த நடிகை சுருதி மேல் படிப்பு படிக்க லண்டன் சென்று விட்டார். இவர் மீது தமிழகம் முழுவதும் திருமணம் செய்வதாக பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: