3 வருடமாக காதலித்து வந்த ஆஸி. வீரரை கரம்பிடிக்கும் வினி: விரைவில் திருமண தேதி அறிவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தனக்கு மனரீதியாக பிரச்னை இருப்பதாகவும், அதனால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரியிருந்தார். தேசிய அணியில் இடம் பெறாவிட்டாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமன் (27) என்ற பெண்ணை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பதிவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது அதிலிருந்து அவர் மீள உதவியதில், வினி ராமனுக்கு முக்கியப் பங்குள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் மேக்ஸ்வெல் வினி ராமனிடம், ‘இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு, வினி ராமனும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோதிர சின்னத்தோடு ஜோடியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். விரைவில் திருமண ேததி அறிவிக்க உள்ளனர். வினி ராமனின் பெற்றோர் இந்தியாவின் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஆனால் வினி ராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். மெல்போர்னில் மருந்தக பிரிவில் வினி ராமன், தனது பட்டப் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: