ராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்

சென்னை: ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செல்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: