இந்திய பொருளாதாரம் 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தகவல்

டெல்லி: இந்திய பொருளாதாரம் 2019 அக்டோபர் - டிசம்பர் வரையான 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தகவல் அளித்துள்ளது. 2019 ஜூலை - செப்டம்பர் காலாண்டை விட 3வது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான 8 அடிப்படைத் தொழில்களும் ஜனவரியில் 2.2 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. 2019 ஜனவரியில் 1.5 சதவீதம் ஆக இருந்த அடிப்படை தொழில்களின் வளர்ச்சி விகிதம் கடந்த மாதம் 2.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. ஜனவரியில் நிலக்கரி உற்பத்தி 8 சதவீதமும் பெட்ரோல், டீசல் உற்பத்தி 1.9 சதவீதமும் மின் உற்பத்தி 2.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஜனவரியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உர வகைகளின் உற்பத்தி சுருங்கிவிட்டதாக அரசு தகவல் அளித்துள்ளது.

Related Stories: