×

பொருளாதாரத்தில் அடிப்படை தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஜனவரியில் 2.2 சதவீதம் உயர்வு

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான 8 அடிப்படைத் தொழில்களும் ஜனவரியில் 2.2 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. 2019 ஜனவரியில் 1.5 சதவீதம் ஆக இருந்த அடிப்படை தொழில்களின் வளர்ச்சி விகிதம் கடந்த மாதம் 2.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. ஜனவரியில் நிலக்கரி உற்பத்தி 8 சதவீதமும் பெட்ரோல், டீசல் உற்பத்தி 1.9 சதவீதமும் மின் உற்பத்தி 2.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஜனவரியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உர வகைகளின் உற்பத்தி சுருங்கிவிட்டதாக அரசு தகவல் அளித்துள்ளது.

Tags : Growth rate
× RELATED தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!...