×

நிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்!

புதுடெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங்(32), பவன்குமார் குப்தா(25), வினய்குமார் ஷர்மா(26), அக்ஷய் குமார்(31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போனது.

இதில், தூக்கு தண்டனை குற்றவாளிகளில் பவன் குப்தா தவிர மற்ற மூவர்களான அக்ஷய் குமார் சிங், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. பவன் குப்தாவுக்கு மட்டுமே குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கும் வாய்ப்பும், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தால், அந்த மனு விசாரிக்கப்பட்டு அதன் முடிவு வந்த பின், அடுத்த ஒருவாரத்துக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருக்கிறது. இதற்கிடையில், திகார் சிறை நிர்வாகம் சார்பிலும், நிர்பயா பெற்றோர் சார்பிலும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில, பவன் குப்தா தரப்பில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுத்தாக்கலால் வரும் மார்ச் 3ம் தேதியன்று 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.Tags : Pawan Gupta ,Supreme Court ,Delhi ,SC , Nirbhaya case, Pawan Gupta, execution, Supreme Court
× RELATED நிர்பயா வழக்கு தூக்கு கைதி பவன் குப்தா...