கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்வு!

புதுடெல்லி: கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் படிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன.

Advertising
Advertising

சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது. கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று வரை 38 ஆக இருந்த நிலையில் இன்று 42 ஆக உயர்ந்துள்ளது.

ஜிடிபி மருத்துவமனையில் 38 பேர் இறந்துள்ளதாகவும், எல்.என்.ஜே.பி.யில் 3 பேர் மற்றும், ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒருவர் இறந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. கலவரம் நிகழ்ந்த இடங்களில் அமைதியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்த்பாக், பஜன்பூரா பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனினும், அங்கு நிலவரத்தை கட்டுக்குள் வைக்க வடகிழக்கு டெல்லியில் கூடுதலாக 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: