தமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்

சென்னை : தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம்  உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின்  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

Advertising
Advertising

Related Stories: